Nee Unakku Sontham Allave நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே - திரு
ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே
இந்த நன்றியை மறந்த போனாயோ
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ
பழைய பாவத்தாசை வருகுதோ
பிசாசின் மேலே பட்சமுனக்குத்
திரும்ப வருகுதோ
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்
பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
உலகைவிட்டுப் பிரியனும்
அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்