Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேனையா
என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் இயேசுவே