• waytochurch.com logo
Song # 15325

Nadantha Thellam Nammaikke நடந்ததெல்லாம் நன்மைக்கே


நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே

நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி

தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர்

சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி

உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்

என் கிருபை உனக்குப்போதும் என்றீர்
பெலவினத்திலே பெலன் என்றீர்

தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி

விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி

கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com