Nam Yesuvai Pugazhnthidum நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்
ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே
உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்