Nallavare Yesu Deva நல்லவரே இயேசு தேவா
நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்
உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.