Nesikkum Nesar Yesu நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
காத்து நடத்திடுவார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உண்டு
உன்னதங்களிலே வாசம் செய்யும்
உன்னதமான தேவன் உண்டு
உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
உடனே பதிலளிப்பார்-உனக்கு
பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
பரிந்து பேசும் இயேசு உண்டு
பரன் பாதம் தேடியே வந்தால்
பரிவாய் பதிலளிப்பார்
அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
இன்ப தேவ ஆவி உண்டு
துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
கனிவாய் பதிலளிப்பார்
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
என்றும் மாறா வார்த்தை உண்டு
அதிகாலையில் அவர் முகம் கண்டால்
அன்பாய் பதிலளிப்பார்