Naan En Nesarudaiyavan நான் என் நேசருடையவன்
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்
பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்
தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்
எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்
என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்