• waytochurch.com logo
Song # 15337

Nambikkaiyinaal Nee நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்


நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்.

அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்து விட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்து விட்டாய்

ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்று
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்

ஆபிரகாம் சாராள் குழந்தை பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்- உன்

கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
எழுநாள் ஊர்வலம் வந்ததினால்

உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்

மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே

நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம்
நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
பயம் இல்லையே திகில் இல்லையே
படைத்தவர் நம்மை நடத்திச் செல்வார்.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com