Neeranri Verillai Iaya நீரன்றி வேறில்லை ஐயா
நீரன்றி வேறில்லை ஐயா
எல்லாமே நீர் தானே
உடலும் உள்ளமெல்லாம்
உயிரெல்லாம் நீர் தானே
உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்
துன்பவேளையில் வேண்டிடும் போது
நல்ல துணை நீரே
தாங்கா துயரில் தவித்துடும் போது
தாங்கும் பெலன் நீரே
எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
எந்த வேளையிலும் நினைப்பேன்
ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
என் வாழ்வினில் இனி
பாவ பாதையில் பாரினில்
அலைய தேடி வந்தவரே
பாவி எனக்காய் சிலுவையில்
தொங்கி வாழ்வு தந்தவரே
உயிருள்ளவரை என் உன்னதரை
உயிரோடு கலந்திடுவேன்
இரவும் பகலும் இதயம் நிறுத்தி
இசை கானம் பாட