நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
Nadapathelam Namakku Thaan
நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்
யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்
சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்
கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்
எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து