Nithya Raja Nirmala Natha நித்திய இராஜா நிர்மல நாதா
நித்திய இராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே
என் மன ராஜ்யத்தில்
என்றும் அரசாளுகின்ற
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
கண்ணயர்ந்த வேளையிலும்
கணிமைப்போல் காத்தவரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும்
கண் மேல் உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம்
இப்பகல் வேளையிலும்
எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய
என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்