Naan Paada Varuveer Ayia நான் பாட வருவீரைய்யா
நான் பாட வருவீரைய்யா
நான் போற்ற மகிழ்வீரைய்யா
என் வாழ்விலே வந்தீரைய்யா
புது வாழ்வு தந்தீரைய்யா
தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
இமைப்பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்
மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உந்தன் வாக்குகள் மாறாதது