Neer Ennai Kangira Devan நீர் என்னை காண்கின்ற தேவனே
நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மை காண வாஞ்சையே
தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்
திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம்
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசு நாதா
என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா