Neere enthan kanmalai நீரே எந்தன் கன்மலை
நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்
துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்
எல்லா சூழ்நிலையிலும்
மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கபடுவதில்லை
மனுஷரை நம்பிடேன்
பிரபுகளையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான்
நம்பிடேன்
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை
எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
வழியும் நீரே வழுவாமல்
காப்பவரே
எந்தன் தாயும் தகப்பன் நீரே
எந்தன் நண்பன் நீரே
எல்லாமும் நீரே
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மையே விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை