Neer En Sontham Neer நீர் என் சொந்தம் நீர்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில் - ஆழியின்
ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னைத் தேற்றுமே
வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் பிள்ளையின் அழுகுரல் கேட்டவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர்
நெரிந்த நாணலை முறியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றியவர்
விடுதலை தேவன் இயேசு பரன்