• waytochurch.com logo
Song # 15368

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

Nambi Vantha Manitharellam


நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்

நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே

மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக் கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்

என் பெலன் நீர்தானே
என் கேடகம் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் - நான்

கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்

கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம் பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்

குருடன் பர்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று
ஜெபித்து பார்வை பெற்றான்

நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யவீர் உம்மை நம்பினதால்

இக்கட்டு துன்ப வேலையில்
காக்கும் அரணானீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com