• waytochurch.com logo
Song # 15369

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

Neer Thiranthal Adaipavan


நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்

நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது

தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com