• waytochurch.com logo
Song # 15372

Neeye Nirantharam நீயே நிரந்தரம்


நீயே நிரந்தரம்
இயேசுவே என் வாழ்வில்
நீயே நிரந்தரம்

அம்மையப்பன் உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா
உம் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உம்மில்
உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம்
நிரந்தரம்
நீயே நிரந்தரம்

தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்

செல்வங்கள் கொணரும் இன்பத்தில்
இல்லை நிரந்தரம் பதவியும் புகழும்
தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான
நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை
நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com