Nambikkayum Neer Thane நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே
நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்
பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்