Ninaivellam Ekkamellam நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே