நன்றி நிறைந்த உள்ளத்தோடு
Nandri Niraintha Ullathodu
நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
உந்தன் மகனாக மாற்றி விட்டீர்
உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்
மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே