ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
Ovvoru Pakirvum Punitha Viyalanam
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் –2
இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே –2
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே –2
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் –2
நாளைய உலகின் விடியலாகவே !
பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே –2
இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் –2
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !