• waytochurch.com logo
Song # 15383

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின்

Ootra Pada Vendume


ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்

தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே

ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்

ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com