ஓசன்னா கீதம் பாடிடுவேன்
Hoshana Geetham Paadiduven
ஓசன்னா கீதம் பாடிடுவேன்
உன்னத தேவன் உந்தனுக்கே
துதி பலி ஸ்தோத்திரங்கள்
தூயவர் உமக்குத்தானே
வானம் பூமியும் படைத்தவரே
வாழ்த்தி உம்மை போற்றிடுவேன்
வல்லவரே நல்லவரே
ஆராதனை உமக்கே
ஜீவன் தந்து மீட்டவரே
ஜீவிக்கும் தேவன் நீர்தானய்யா
இரட்சகரே இயேசுநாதா
ஆராதனை உமக்கே
என்னைத் தேற்றும் நேசர் நீரே
எந்நாளும் என்னோடு இருப்பவரே
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
ஆராதனை உமக்கே