• waytochurch.com logo
Song # 15405

ஒருநாளும் வீணாகாது

Oru Naalum Veenaagaathu


ஒருநாளும் வீணாகாது
நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒரு நாளும் வீணாகது

கர்த்தரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார்
அவர் விருப்பம் நீ செய்திட
ஆற்றல் தருகின்றார்

தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே
பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே

பிடித்துக் கொள் ஜீவவசனம்
பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில்
நீதானே நட்சத்திரம்

அவமானம் நிந்தை எல்லாம்
அனுதின உணவு போல
பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்
பெலன் தரும் ஊட்டச்சத்து

கண்களை பதித்துவிடு
கர்த்தாரம் இயேசுவின் மேல்
சிலுவை சுமந்ததனால்
சிங்காசனம் அமர்ந்துவிட்டார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com