ஒவ்வொரு நாட்களிலும்
Ovvoru Natkalilum Piriyamal
ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் சிந்தியே
மகனையே பலியாக்கினீர்
நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்தீர்