• waytochurch.com logo
Song # 15412

ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே

Oru Kuraivillaamal Kaathuvandheerae


ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே
கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே

வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய்ப் பொழிந்தீரே எல்லா
வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

என்முன்னே சென்றீரே பயணத்தைக் காத்தீரே
மகிமையால் மூடிக் கொண்டீரே எங்கள்
குடும்பத்தைக் காத்து வந்தீரே

என் விளக்கை ஏற்றினீரே இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமரச் செய்தீரே

உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
எப்படி மறப்பேன் என்றீரே

சிறுமையான என்னைத் தூக்கி எடுத்தீரே
உம் சிறகால் என்னை மூடினீரே
கரத்தால் என்னைத் தாங்கினீரே

அநாதி சிநேகத்தினால் என்னை நேசித்தீரே
உம் கிருபை என்னைத் தாங்கியதே
உம் காருண்யம் என்னைத் உயர்த்தியதே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com