• waytochurch.com logo
Song # 15414

ஓய்வு நாள் இது

Oivu Naal Ithu


ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே

நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே

ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே

ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்

கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com