• waytochurch.com logo
Song # 15416

ஓடிவா ஜனமே கிறிஸ்து

Odivaa Janame Kiristhu


ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்
கோடிவா ஜனமே பண்டிகை கொண்
டாடிவா ஜனமே அவர் பாதத்தைத்
தேடிவா ஜனமே

நீடு சமர் புரி கோடி அலகையை
நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு

நேர்ந்தடிகள் துதித்து நித்ய ஜெபத்தில்
நீதித் தவங்கள் கதித்து
சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த
தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான
ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு
திட்டமாக நின்று பத்துக் கற்பனைப் படியே சென்று
தேவ துந்துமி முழங்க சங்க கீதங்களும்
பா வினங்களும் விளங்க அதன் ஒலியால்
அண்டமும் குலுங்க பர மண்டலங்களும் இலங்க
ஆராதனைகள் செய்து சீராய் நடந்துகொண்டு
அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
உருகி நடம் செய்து பெருகிய அன்புடன்

ஞானஸ்நானம் பெற்றுச் சுருதி நூலின்
மேன்மைச் சாஸ்திரம் கற்று
ஈனப் பாவிகள் சுற்று மாயங்கள் அக்கி
யானக் கிரியைகள் அற்று மாங்கிஷத்தின்
இருளாந்த காரம் நீங்கி அருளானந்தங்கள் ஓங்கி
இஷ்டமாய் நடந் தெலார்க்கும் துஷ்டத்தனப் பொல்லார்க்கும்
யேசு நேசத்தைச் சூட்டி மனோகரத்தால்
பாசத் தன்பு பாராட்டிக் கவனமாக
அந்தி சந்தியும் ஜெபங்கள் மந்திரங்களைப் படித்து
ஆண்டாண்டெமைக் கரிசித்து மீண்டாண்டனுக்கிரகித்த
அறிவுகள் இங்கித கிருபை விளங்கிய
திரிமுதலின் சரண் உறுதியுடன் தொழ


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com