• waytochurch.com logo
Song # 15422

பொல்லாத மனிதன்

Pollaadha Manidhan



பொல்லாத மனிதன் பொல்லாத மனிதன்
நல்ல ஈவுகளை பிள்ளைக்குக் கொடுப்பான் - (2)
பரம பிதாவும் வேண்டுபவருக்கு
நன்மைகளாயிரம் நிச்சயம் தருவார் (2)
நன்மையகளாயிரம் நிச்சயம் தருவார்.

இயேசு சொன்னார், இதை இயேசு சொன்னார் (4)
அவர் வார்த்தை சத்தியம், நிறைவேறும் நிச்சயம் (2)

1) வேண்டுவதற்கும், நினைக்கிறதற்கும்
மிகவும் அதிகமாய் கர்த்தர் செய்திடுவார் (2)
தாவீதும், யாக்கோபும், சீலாவும், பவுலும்
வேண்டுதல் செய்தனர், பெற்று மகிழ்ந்தனர் (2)
வேண்டுதல் செய்தனர், பெற்று மகிழ்ந்தனர் - இயேசு

2) வாலாவதில்லை நீ, வாலாவதில்லை
தலையாக உன்னை மாற்றிடுவார் - (2)
அபிஷேகத் தைலத்தை உன் தலையில் ஊற்றுவார்
உன் பேரும் சிறந்திடும் உன் வாழ்வு மலர்ந்திடும் (2)
உன் பேரும் சிறந்திடும் உன் வாழ்வு மலர்ந்திடும் - இயேசு

3) நிச்சயமாகவே முடிவு தான் உண்டு
உன் நம்பிக்கை என்றும் வீணாய்ப் போகாது (2)
கவலைப்படுவதால், உயரம் தான் கூடுமோ?
இயேசு உன் அருகில் இருந்தால் சந்தோஷமே! (2)
இயேசு உன் அருகில் இருந்தால் சந்தோஷமே! - இயேசு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com