• waytochurch.com logo
Song # 15424

பரனே என் இதயத்தில் வாரும்

Parane en idhayathil vaarum


பரனே என் இதயத்தில் வாரும்
பரநோக்கம் நிறைவேற்ற வாரும்

அனுதினம் என்மனம் கழுவிடும்
அழகிய புதுமனம் தந்திடும்
பரிவுடன் பாவியை கண்டிடும் - என்
சுயமதை திருசலவை செய்திடும்

அதட்டிவிடும் நெஞ்சை அகற்றிவிடும் நஞ்சை
புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
அழுகிய சிந்தனை மங்கவே
மனதினுள் வசனங்கள் தங்கவே
அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
அடைக்கலம் அருளுமே துங்கவே

திருக்குள்ளவன் மிஞ்சும் கிறுக்குள்ளவன் கெஞ்சும்
கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
புவியதன் சோதனை குறையவே
பரமனின் போதனை நிறையவே
பகலதன் பிள்ளையாய் வளரவே
உலகினில் தீபமாய் ஒளிரவே

மயக்கத்திலே மனம் கிரக்கத்திலே குணம்
உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் - கெட்ட
உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
அகமதின் கபடினை தள்ளவே
ஆவியின் கனிதனை அள்ளவே
அசுரனை அனுதினம் வெல்லவே
அவனியில் கிருபையைச் சொல்லவே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com