Podhum podhum sodhanaigal podhume போதும் போதும் சோதனைகள் போதுமே
போதும் போதும் சோதனைகள் போதுமே
வேண்டும் வேண்டும் ஆறுதல் வேண்டுமே
தயாபரனே இரங்கி வாருமே தயாபரனே
தப்பென்று தெரிந்தும் தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசு தேவா
தப்பிக்க வழி செய்வீரா
கண்களில் இச்சைகொண்டேன் மாமிசத்தில் இச்சைக்கொண்டேன்
ஜீவனில் பெருமைகொண்டேன்
எப்படி இவைகளை மேற்கொள்வேனென்று
உம்மையே நோக்கி நின்றேன்
பாவத்தை செய்யும்போது பாவம் என்னை சூழும்போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும்போதோ
கர்த்தரை நான் நினைக்கிறேன்