• waytochurch.com logo
Song # 15428

பின்மாரி மழை இன்று பொழியட்டுமே

Pinmari Malai Indru


பின்மாரி மழை இன்று பொழியட்டுமே
வானத்தின் மதகுகள் திறக்கட்டுமே
அக்கினி பெருமழை இறங்கிடவே
எலியாக்களை எழுப்பும்!

பல்லவி
எழுப்புதல் நாயகனே, எழுந்திடும் தேசத்திற்காய்...
கிழித்திடும் வானங்களை, அக்கினி பரவட்டுமே...

எலியாவின் ஆவியால் நிறைத்திடுமே
முழங்கால்கள் யாவையும் முடக்கிடுமே
கர்த்தரே தேவன் என்று முழங்கிடவே
எலியாக்களை எழுப்பும்

கர்மேலின் அனுபவம் தொடரட்டுமே
சாத்தானின் திட்டம் முற்றும் அழியட்டுமே
பாகாலின் நேரம் இப்போ முடிகிறதே
எலியாக்களை எழுப்பும்

தீபத்தை போலவே அபிஷேகமும்
விசுவாசி மேலெல்லாம் தீப்பிளம்பும்
அக்கினி ஜுவாலையாய் மாற்றிடவே
எலியாக்களை எழுப்பும்

கிருபையின் காலங்கள் முடிகிறதே
வருகையின் நேரம் வந்திட்டதே
தேசத்தை குலுக்கி அசைத்திடவே
எலியாக்களை எழுப்பும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com