• waytochurch.com logo
Song # 15435

பாரீர் கெத்செமெனே பூங்காவில்

Paareer Gethsamane Poongavil


பாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே
பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன் படும்
பாடுகள் எனக்காகவே

அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம்
செய்தேன் என்றாரே

இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே

மும்முறை தரைமீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீட்புறவே

அன்பின் அருள்மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே
நெந்து அலறுகின்றார்

என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணியெண்ணியே உள்ளங்கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com