• waytochurch.com logo
Song # 15438

போற்றுவோம் போற்றுவோம்

Potruvom Potruvom


போற்றுவோம் போற்றுவோம்
இயேசுவையே போற்றுவோம்
துதி சாற்றுவோம் சாற்றுவோம்
கர்த்தருக்கே சாற்றுவோம்

நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரை
போற்றுவோம்
நம்மையும் மீட்க வந்த
மீட்பரையே போற்றுவோம்
இயேசுவின் நாமமே நமது மேன்மையே

விண்ணுலக ரோஜாவோ மண்ணில்
வந்து பூத்ததோ
விண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட
வந்ததோ
விண்மீங்கள் கூட்டத்தில் இவர்
விடிவுகால வெள்ளியோ
ராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோ
இவரும் நம்மை மேய்க்கும்
நல்ல மேய்ப்பர் என்பதாலோ
இவரையுமே மேய்ப்பர்களும்
தேடியே வந்தார்களோ
நம் இதயம் கூட இன்று
ஒரு மாட்டுத் தொழுவந்தானே
இதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே

உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே
எந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே
இருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே
இன்னல்கள் போக்க எந்தன் உள்ளம் வந்த இயேசுவே
பாவங்கள் போக்கிடவே மண்ணில் பிறந்தாரே
பரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே
இவரே மெய்யான தேவன்
நம்மை தேடி வந்த தெய்வம்
உயிருள்ள நாளெல்லாம் அவரையே பாடுவோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com