பிறந்தார் பிறந்தார் வானவர்
Piranthar Piranthar
பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மாதேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மாஜோதியாய் திகழ்ந்தார்
பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்
மேலான நாமம் பேற்றார்
இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்