பிசாசனவன் தோற்றுப்போனவன்
Pisasaanavan Thottruponuvan
பிசாசனவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே இயேசு நமக்கு தந்தார்
பிசாசனவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளை மேல்
அவனுக்கு அதிகாரம் இல்லை
ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை
துதிக்கும்போது
அவன் கிரியைகளை
நாம் அழித்திடலாம்
பிசாசனவன் பொய்யன் தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குள்ளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குள்ளே
அணைத்திட யாராலும் முடியாது