பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
Parisutham Pera Vanditeergala
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்
பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
மாசில்லா சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
மறு ஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
மாசு கறை நீங்கும் நீச பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்