பாவ சஞ்சலத்தை நீக்க
Paava Sanjalathai Neeka
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்
கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்பை தீயகுணம் மாற்றுவார்
பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்