பாவங்கள் போக்கவே சாபங்கள்
Pavangal Pokave Sabangal
பாவங்கள் போக்கவே சாபங்கள்
நீக்கவே பூலோகம் வந்தாரய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரய்யா - கண்ணீரை
துடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா
எந்தன் இயேசுவே - 4
தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை
கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா
நான் தேடிபோகவில்லை
என்னை தேடி வந்தாரய்யா
தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter