• waytochurch.com logo
Song # 15447

பணியா யோசிரசே படியோர்

Paniya Yosirase Padiyor


பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து
அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ

நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில்
வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி

கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்
சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண்

காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக
தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ

உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து
உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே

துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்
நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி

கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்
அண்டம் புகழ நவகீதம் பாடுவார் -கண்டமே

நெஞ்சே நீயணையாய், நேசசீடனும், பாலகரும்
அஞ்சா துய்ய வணைத்திடு மார்பனை -நெஞ்சே

சேவிப்பீர் செங்கரங்காள், தீயர் நல்லாரெவரெவர்க்கும்
தாவிப்பணி செய்து யர்த்துங் கரத்தனைச் -சேவி

கால்காள் ஓடுங்களே, கானான் தேசத்திசைகளெங்கும்
மேலாம் ஞானம் விதைத்தவர் சேவைக்குக் -கால்காள்

பாதங்களே நடமின், படுபாவி கண்ணீராடிக்
கோதல கைச்சிரம் நைந்த வடிகளில் -பாதங்களே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com