பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
Parisuthar Parisuthar Yesuve
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
வல்லமையுடையவரே
வான் புவி உந்தன்
மகிமையால் நிறைந்தனவே
ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா
கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம்
மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்
அன்பு உருக்கம் அடையவர்
அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்
தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்
நாவுகள் உம்மை துதித்திடும்
முழங்கால் மடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்