• waytochurch.com logo
Song # 15450

புதிய பாடல் பாடி பாடி இயேசு

Puthiya Padal Padi Padi


புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே -எனக்கு

உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே -தினமும்

அதிசயமானவரே
ஆலோசனைக் காத்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே -எல்லா

கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே -இயேசு

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் -அவர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com