Pesum Deivam Neer பேசும் தெய்வம் நீர்
பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர்
இயேசுவே -4
என் பாரம் சுமப்பவர் நீர்
என் தகம் தீர்ப்பவர் நீர்
என்னைப் போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர்
என் குடும்ப வைத்தியர் நீர்
ஏற்ற நல் ஒளஷதம் நீர்
எந்தன் வியாதி பெலவீனங்களில்
என்னோடிருப்பவர் நீர்
என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்துபவர் நீர்
என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர்
எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர் நீர்