• waytochurch.com logo
Song # 15463

பரலோகமே என் சொந்தமே

Paralogame En Sonthame


பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ என் இன்ப
இயேசுவை நான் என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்

சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே எனது இலட்சியமே

இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன்

பரம சுகம் காண்பேன்
பரம தேசம் அதில் சேர்வேன்
ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

அழைப்பின் சத்தம் கேட்டு நானும்
ஆயத்தமாகிடுவேன் நாட்களும்
நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

பளிங்கு நதியோரம் சுத்தர்
தாகம் தீர்த்திடுவார் தூதர்கள்
பாடிட தூயனை தரிசிப்பேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com