• waytochurch.com logo
Song # 15466

parisutharae ummai aarathipen பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்


பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்

யேகோவா ரஃப்பா
நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா -நீரே
கூடவே இருப்பவரே

ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே

யேகோவாயீரே நீரே
தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே
சமாதானம் தருபவரே

யேகோவாநிசி நீரே
ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com