Parisutharae Ummai Aarathipen பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவ பலியாய்
யேகோவா ரஃப்பா
நீரே சுகம் தருபவரே
யேகோவா ஷம்மா -நீரே
கூடவே இருப்பவரே
ஆராதனை உமக்கே
ஆராதனை என்றுமே
யேகோவாயீரே நீரே
தேவையெல்லாம் சந்திப்பீர்
யேகோவா ஷாலோம் நீரே
சமாதானம் தருபவரே
யேகோவாநிசி நீரே
ஜெயம் தருபவரே
யேகோவா ரோஹி நீரே
எந்தன் மேய்ப்பர் நீரே