• waytochurch.com logo
Song # 15487

பலியிடு துதி பலியிடு

Paliyidu Thuthi Paliyidu


பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

துதி பலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே
யோனாவை கக்கியது கரையிலே - அன்று

நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்
பலுகிப் பெருகச் செய்தார் - அன்று

நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது
கண்டார்கள் கர்த்தர் மகிமையை

சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின
ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்
அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

துதி செய்யாத் தொடங்கினதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடிந்து போயினர்
எல்லாரும் பிரேதமானார்கள்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com