• waytochurch.com logo
Song # 15491

பாடுவேன் உம் புகழை பாடுவேன்

Paaduvaen Um Pugazhai


பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி
என்னை தேற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை
மூடி என்றும் காத்தீரே
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com