• waytochurch.com logo
Song # 15495

பரலோக கார்மேகமே

Paraloga Kaar Megamae


பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா - என்

ஆவியானவரே என் ஆற்றலானவரே -பரலோக

அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே - ஆவியானவரே

மேன்மையாய் உயரத்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்

மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைக்கின்றேன்
உம்மேக நிழல்தனிலே

விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே

தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகின்றீர்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகின்றீர்

அக்கினி ஸ்தம்பமாக
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறீர்

அப்பா பிதாவே என்று
கூப்பிடச் செய்தீரே
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உம் வரவால்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com